தவெக தலைவர் விஜய் தலைமையில் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தனர். கடந்த ஒன்பது நாடுகளில், விஜய்யோ அல்லது அவருடைய கட்சியினரோ பாதிக்கப்பட்டவர்களை இதுவரை சந்திக்கவில்லை. அனால், கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் விஜய்யால் நோக்கி சுற்றிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் தவெக தனித்து தேர்தலில் போட்டியிடும் அல்லது அஇஅதிமுகவோடு கூட்டணி வைக்குமா அல்லது பாஜகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளது. அப்படி விஜய் கூட்டணி வைத்து போட்டியிட்டால், திமுகவின் வியூகம் என்ன? காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? இந்த கேள்விகளை விவாதிக்கிறார்கள் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையின் தமிழ் நாடு செய்தியாளர் சிவப்பிரியன் மற்றும் தி டிபேட் ஊடகத்தின் ஆசிரியர் மனோஜ் பிரபாகர்